ஷா ஆலம், ஜூலை 22- நாட்டில் இன்று புதிதாக 13,034 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது. இந்த எண்ணிக்கை நேற்றைவிட இன்று சுமார் ஆயிரம் அதிகமாகும்.
சிலாங்கூரில் இந்த எண்ணிக்கை 6,049 ஆகப் பதிவானதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கடந்த ஒரு வார காலத்தில் இரண்டாவது முறையாக இந்த எண்ணிக்கை ஆறாயிரத்தை எட்டியுள்ளதாக அவர் சொன்னார்.
இன்றைய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 964,918 ஆக உயர்வு கண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாநில வாரியாக நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை வருமாறு-
கோலாலம்பூர் (1,611), ஜொகூர் (791), நெகிரி செம்பிலான் (711), கெடா (701), சரவா (644), சபா (497), திரங்கானு (391), பினாங்கு (371), மலாக்கா(353), பேராக் (284), கிளந்தான் (240), பகாங் (261), புத்ரா ஜெயா (100), லபுவான் (24), பெர்லிஸ் (6).


