ஷா ஆலம், ஜூலை 22- கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக செலாயாங் மருத்துவமனை நேற்று இரவு தொடங்கி தகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அம்மருத்துவமனை இதுநாள் வரை கோவிட்-19 நோயாளிகள் மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது.
அடுத்த சிகிச்சைக்கான தேதியில் மாற்றம் செய்யப்படுவது தொடர்பான தகவல் விரைவில் நோயாளிகளுக்கு அறிவிக்கப்படும் என்று முகநூல் வாயிலாக வெளியிட்ட சுருக்கமான அறிக்கை ஒன்று கூறியது.
இந்த மருத்துவமனையுடன் சேர்த்து தற்போது சிலாங்கூரில் மூன்று மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளுக்கான முழு மருத்துவமனைகளாக செயல்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து சுங்கை பூலோ மருத்துவமனை மற்று அம்பாங் மருத்துவமனை ஆகியவற்றை கோவிட்-19 மருத்துவமனைகளாக சுகாதார அமைச்சு மாற்றியது.
நேற்று வரை சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 24,703 பேர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.


