ஷா ஆலம், ஜூலை 21- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட இருபது பள்ளி வேன் ஓட்டுநர்களுக்கு கோத்தா அங்கிரிக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கினார்.
இந்த உணவுப் பொருள் விநியோக நிகழ்வு இங்குள்ள செக்சன் 2இல் டிரைவ் த்ரு எனப்படும் வாகனங்களில் இருந்தவாறு பெற்றுச் செல்லும் வழிமுறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மற்றும் சமூகவியல் நடவடிக்கைகளும் ஜூன் 1 முதல் 14 வரை மூடப்படுவதாக அரசாங்கம் கடந்த மே மாதம் 28 ஆம் தேதி அறிவித்தது.
எனினும், நோய்த் தொற்றின் எண்ணிக்கை ஐயாரத்திற்கும் குறையாத நிலையில் மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அது வரும் ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.


