ஷா ஆலம், ஜூலை 21- இன்று நாட்டில் புதிதாக 11,985 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று பதிவான 12,366 நேர்வுகளுடன் ஒப்பிடுகையில் இது சற்றே குறைவான எண்ணிக்கையாகும்.
சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றின் வீரியம் இன்னும் தணியாத நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இம்மாநிலத்தில் நேற்று 5,524 ஆக இருந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று 5,500 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு அடுத்த நிலையில் 1,174 நேர்வுகளுடன் கோலாலம்பூரும் 800 நேர்களுடன் கெடாவும் 745 நேர்வுகளுடன் நெகிரி செம்பிலானும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர் (644), பகாங் (603), சபா (474), மலாக்க 9453), கிளந்தான் (386), பினாங்கு (362), பேராக் (274), சரவா (261), திரங்கானு (171), புத்ரா ஜெயா (51), லபுவான் (35), பெர்லிஸ் (2) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.


