கோலாலம்பூர், ஜூலை 21- நாட்டில் நேற்று பின்னிரவு 11.59 மணி வரை 47 லட்சத்து 69 ஆயிரத்து 909 பேர் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 14.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
இதுவரை 1 கோடியே 3 லட்சத்து 1,905 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார். இதன் வழி நட்டில் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்து 71 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
ஹாஜ்ஜூப் பெருநாளான நேற்று தடுப்பூசி பெற்ற 299,593 பேரும் இதில் அடங்குவர். நேற்று 204,064 பேர் முதலாவது தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 95,529 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றனர் என்றார் அவர்.
நேற்று வரை சிலாங்கூரில் அதிகப்பட்சமாக அதாவது 107,444 பேர் தடுப்பூசி பெற்றனர். அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் (63,493), சரவா (46,606), ஜொகூர் (28,050), பினாங்கு (14,630) உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.


