ஷா ஆலம், ஜூலை 21- செயற்கை சுவாசக் கருவி தேவைப்படும் ஐந்தாம் நிலை கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரிப்பை கண்டுள்ளது. நேற்று முன்தினம் 26 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 52 ஆக உயர்வு கண்டது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 12,366 கோவிட்-19 நோயாளிகளில் 178 பேர் மட்டுமே மூன்றாம் , நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை நோயாளிகள் பட்டியலில் உள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
மூன்றாம் நிலை முதல் ஐந்தாம் நிலை வரையிலான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லாவிட்டாலும் அவர்கள் சராசரி 21 நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நான்காம் நிலை நோயாளிகள் சராசரி 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டி வரும். நிமோனியா எனப்படும் நுரையீல் அழற்சிக்கு உள்ளானவர்களுக்கு தீவிர கண்காணிப்பு தேவைப்படும் என்றார் அவர்.


