ஷா ஆலம், ஜூலை 20- நெருக்கடி மற்றும் பேரடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவும் நோக்கில் தன்னார்வலர் குழுவை (செர்வ்) சிலாங்கூர் அரசு உருவாக்கவுள்ளது.
சிலாங்கூர் இளைஞர் செயல்பாட்டு மன்றத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அமைக்கப்படவிருக்கும் இந்த தன்னார்வலர் குழுவில் சுமார் 3,000 இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க திட்டமிட்டுப்பட்டுள்ளதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
சிலாங்கூரில் தன்னார்வலர் நடவடிக்கைளை தீவிரப்படுத்துவதற்கும் சமுதாயத்திற்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக அனைத்து வயதினரையும் இத்திட்டத்தில் சேர்க்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
சமூகத்திற்கு சேவையாற்றுவதில் சிலாங்கூரில் உள்ள தன்னார்வலர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதில் இந்த குழு முக்கிய பங்கினை ஆற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்
இங்குள்ள ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மையத்தில் உள்ள தடுப்புசி செலுத்தும் மையத்தின் தன்னார்வலர்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒரு லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய கைருடின், இத்தன்னார்லவர் குழுவில் இளைஞர்களை சேர்க்கும் நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்.


