ECONOMY

மலேசியாவின் 2021 நிதி பற்றாக்குறை உள்நாட்டு உற்பத்தியில் 6.5 முதல் 7 விழுக்காடாக இருக்கும்

19 ஜூலை 2021, 9:54 AM
மலேசியாவின் 2021 நிதி பற்றாக்குறை உள்நாட்டு உற்பத்தியில் 6.5 முதல் 7 விழுக்காடாக இருக்கும்

கோலாலம்பூர், ஜூலை 19 - மலேசியாவின் நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 முதல் ஏழு விழுக்காடு வரை உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ துங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறுகையில், மக்களின், நாட்டின் பொருளாதார தேவைகள் அதிகரிக்கும் போதெல்லாம் அதனை பூர்த்திச் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. "எங்களுக்கு ஒரு பற்றாக்குறை உள்ளது, அது ஏழு சதவீதத்தை எட்டும்.

பற்றாக்குறையின் அளவு கடன் வாங்கும் மற்றும் திரும்ப செலுத்தும் திறன் மற்றும் இருப்புக்களின் அளவை பொறுத்தது. "மலேசியா பொருளாதாரம் A- மதிப்பிடப் பட்டதாக இருந்தாலும், எங்கள் நிதி இருப்புக்களைப் பொறுத்தவரை, நாங்கள் பல A- மதிப்பிடப்பட்ட நாடுகளை விட சிறியவர்கள்.

ஒரே வித்தியாசம் என்னவென்றால், எங்களுக்கு வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன, ”என்று அவர் தென் சீனா மார்னிங் போஸ்டுக்கு (எஸ்.சி.எம்.பி) அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறினார்.

நாடு மக்களுக்கு போதுமான ஆதரவை அளிக்கிறதா என்பது மிக முக்கியமான விஷயம் என்று அவர் கருத்து தெரிவித்தார்."அரசாங்கம் அளித்துள்ள ஆதரவு - நம்மிடம் உள்ள நிதிக் கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை - போதுமானது என்று நான் நினைக்கிறேன். "எங்கள் கடன் சேவை பாதுகாப்பு விகிதத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும், மேலும் இன்று உள்நாட்டு நிறுவனங்களின் பணப்புழக்கத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

மக்களால் தொடங்கப் பட்ட வெள்ளைக் கொடி பிரச்சாரம், அரசாங்கத்தின் பொருளாதார தூண்டுதல் தொகுப்புகள் சரியாக செயல்படவில்லை என அர்த்தமா என்ற கேள்விக்கு,  துங்கு ஜஃப்ருல், அதனை அப்படியென தான் கருதவில்லை என்று கூறினார்.

"தேர்ந்தெடுக்கப் பட்ட அனைத்து பிரதிநிதிகளுக்கும் ( MP ) தங்கள் தொகுதிகளை கவனிக்க ஒதுக்கீடு வழங்கப் படுவதை உறுதி செய்வதன் மூலம் அந்த பிரச்சினைகளில் சிலவற்றை நாங்கள் நிவர்த்தி செய்துள்ளோம்.

“உண்மையில், அரசாங்கம் ஒரு உணவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளதுடன், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவுகளுடனும் இது செயல்படுத்தப் படுகிறது.

மக்களுக்கு விரிவான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய மக்களின் நல்வாழ்வு மற்றும் பொருளாதார மீட்புப் பொதியின் கீழ் RM10 பில்லியனை நேரடி நிதியாக அரசாங்கம் செலுத்தியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.