MEDIA STATEMENT

380,000 உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு  கட்டணக் கழிவு

16 ஜூலை 2021, 1:15 PM
380,000 உயர் கல்விக்கூட மாணவர்களுக்கு  கட்டணக் கழிவு

கோலாலம்பூர், ஜூலை 16- அரசாங்க உயர்கல்விக் கூடங்களில் பயலும் 186,142  மாணவர்களுக்கு கட்டணக் கழிவை அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் நோக்கில் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த கட்டணக் கழிவுத் திட்டம் 18 கோடியே 57 லட்சம் வெள்ளியை உள்படுத்தியுள்ளது.

மாணவர்களின் சந்தா கட்டண விவகாரத்தில் தளர்வை வழங்கக் கோரி அனைத்து அரசாங்க உயர் கல்விக் கூடங்களுக்கும் உயர்கல்வித் துறை கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.

இதன் வழி சம்பந்தப்பட்ட மாணவர்கள் 10 முதல் 35 விழுக்காடு வரை கட்டணக் கழிவை பெறுவர். சேவைக் கட்டணம், தங்கும் விடுதி, பட்டமளிப்பு விழா ஆகியவற்றை இந்த கட்டணக் கழிவு உள்ளடக்கியிருக்கும்.

2019/2020 கல்வி ஆண்டின் இரண்டாம் தவணை தொடங்கி தற்போது வரை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. அடுத்தக் கட்டமாக இந்த சலுகை 2020/2021 ஆம் கல்வியாண்டிற்கு விரிவுபடுத்தப்படும்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.