ஷா ஆலம், ஜூலை 16- இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இணையம் வழி 2,408 வர்த்தக லைசென்ஸ் விண்ணப்பங்களை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் பெற்றுள்ளது.
அவற்றில் 60 விழுக்காடு அதாவது 1,392 விண்ணப்பங்கள் விளம்பரங்கள் மற்றும் தற்காலிக அனுமதி சம்பந்தப்பட்டவையாகும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக தொடர்பு துணை இயக்குநர் அகமது இஸ்கந்தார் மொக்தார் கூறினார்.
வர்த்தகம் நிர்வாகம் சம்பந்தப்பட்ட 1,016 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், பொதுமக்களின் வசதிக்காக இணையம் வாயிலான விண்ணப்பங்கள் எந்நேரமும் வரவேற்கப்படுதாக தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து விதமான லைசென்ஸ் விண்ணப்பங்களும் இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
விண்ணப்பதாரர்கள் 03-79541560 என்ற தொலைபேசி எண்களில் அல்லது smartlesen@mbpj.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


