ஷா ஆலம், ஜூலை 15- நாட்டில் இன்று 13,215 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கோவிட்-19 வரலாற்றில் அதிகப்பட்ச சம்பவங்களுடன் கருப்பு அத்தியாயத்தை இன்றைய தினம் பதிவு செய்துள்ளது.
கடந்த சில தினங்களாக நாடு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கோவிட்-19 சம்பவங்களை பதிவு செய்த வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 11,618 ஆக இருந்தது.
பிற மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூரில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மொத்தம் 6,120 சம்பவங்கள் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டன.
நெகிரில் செம்பிலானில் 1,603 சம்பவங்களும் கோலாலம்பூரில் 1,499 சம்பவங்களும் கெடவில் 695 சம்பவங்களும் பினாங்கில் 509 சம்பவங்களும் இன்று பதிவாகின.


