ஷா ஆலம், ஜூலை 15- பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் 104 கணினிகளை வழங்கியது.
மடிக்கணினிகள், கையடக்க கணினிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் தங்கள் கல்வியை இயங்கலை வாயிலாக தொடர வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு இந்த உதவி வழங்கப்பட்டதாக அது தெரிவித்தது.
மேலும், மாணவர்களின் வசதிக்காக 12 மாதங்களுக்கான இணைய தரவு வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் கூறியது.


