ஷா ஆலம், ஜூலை 10- வர்த்தக லைசென்ஸ் பெறுவதற்கான விண்ணப்பத்தை இணையம் வாயிலாக மேற்கொள்வதற்கான வாய்ப்பை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஏற்படுத்தியுள்ளது.
வெளி விளம்பரங்கள், தற்காலிக விளம்பரங்கள், நிர்வாக அலுவலகம், உணவகங்கள் மற்றும் சிறிய வர்த்தகங்களுக்கான அனுமதியை பெற இணையம் வழி விண்ணப்பிக்கலாம் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்ப செயலகம் கூறியது.
இந்த விண்ணப்பங்கள் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற 03-79541560 என்ற எண்களில் அல்லது smartlesen@mbjpj.gov என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
வணிகர்கள் வர்த்தக லைசென்ஸ் பெறும் நடைமுறையை எளிதாக்கும் நோக்கில் மாநகர் மன்றம் இந்த வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இதனிடையே, கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பொது மக்கள் வீட்டிலிருந்து வெளியேறுவதை தவிர்க்கும்படி மாநகர் மன்றம் அந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டது.


