கோலாலம்பூர், ஜூன் 27- நாளையுடன் முடிவுக்கு மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் கீழ் குறையும் வரை இந்த ஆணை அமலில் இருக்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின் கூறினார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் முதல் கட்ட அமலாக்கத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள மூன்று நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை இந்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.
இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பைத் தொடர்ந்து மக்களுக்கு உதவக்கூடிய விரிவான திட்டத்தை அரசாங்கம் நாளை அல்லது செவ்வாய்கிழமை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


