கோலாலம்பூர், ஜூன் 27- கோவிட்-19 தடுப்பூசிக்கான போலி பதிவு பாரங்கள் விநியோகம் தொடர்பில் பொது மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
வாட்ஸ்ஆப் புலனங்கள் அல்லது வேறு அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் பகிரப்படும் தடுப்பூசி பதிவு பாரங்கள் புறக்கணிக்கும்படி பொதுமக்களை கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழு கேட்டுக் கொண்டது.
அத்துமீறல் நிகழ்வதை தடுப்பதற்கு ஏதுவாக உங்கள் தனிப்பட்ட விபரங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி தொடர்பான தகவல்களை பெற சிறப்பு பணிக்குழுவின் அதிகாரத்துவ தகவல் தளங்களை மட்டும் நாடுங்கள் என அது வலியுறுத்தியது.


