ஷா ஆலம், ஜூன் 26- நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாக ஐயாயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இன்று 5,803 நேர்வுகள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதே சமயம் சிலாங்கூர் மாநிலத்திலும் நோய்த் தொற்று எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. இன்று இம்மாநிலத்தில் 2,108 சம்பவங்கள் பதிவான வேளையில் நேற்று இந்த எண்ணிக்கை 2,187 ஆக பதிவாகியிருந்தது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய நேர்வுகளுடன் சேர்த்து நாட்டில் நோய்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்னை 728,462 ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக வருமாறு-
நெகிரி செம்பிலான் (741), கோலாலம்பூர், 628), சரவா (491), மலாக்கா (355), ஜொகூர் (329), பகாங் (220), சபா (189), கெடா (186), பினாங்கு (160), பேராக் (137), கிளந்தான் (103), லபுவான் (99), திரங்கானு (29), புத்ரா ஜெயா (24), பெர்சிலிஸ் (4).


