ஷா ஆலம், ஜூன் 25- 2021ஆம் ஆண்டிற்கான இ-பாசார் ராயா இயக்கத்தின் வழி சிறு வணிகர்கள் மாதம் மூவாயிரம் வெள்ளி வரை வருமானம் ஈட்டுவது குறித்து மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பாய்வேர்ல்ட் கிச்சன் நடத்துநர் முகமது கசாலி அனுவாரின் வெற்றியை பகிர்ந்து கொண்ட அவர், நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் வருமானம் ஈட்ட உதவியது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
இ-பாசார் இயக்கத்தின் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தன் மனைவியுடன் உணவுப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கசாலியின் அனுபவத்தை கேட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன் என்று அவர் சொன்னார்.
தனது வர்த்தகத்தை உயர்த்துவது தவிர்த்து சபாக் பெர்ணம் வட்டாரத்திலுள்ள சிறு தோட்டக்கார ர்களின் உற்பத்தி பொருள்களை வாங்குவதன் வழி அவர்களுக்கும் அவர் உதவி வருகிறார். இது தவிர வட்டார ஏழைகளுக்கும் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்துள்ளார் என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இ-பாசார் ராயா இயக்கம் 95 கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வர்த்தகத்தை ஈட்டியது


