தோக்கியோ, ஜூன் 25- ஜப்பானிய அரசாங்கம் மலேசியாவுக்கு பத்து லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை வழங்குகிறது.
மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுக்கு தலா பத்து லட்சம் அஸ்ட்ராஸேனேகா தடுப்பூசிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோதேகி கூறினார்.
மேலும், தைவான் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு கூடுதலாக தலா பத்து லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.
கோவாக்ஸ் எனப்படும் உலகலாவிய தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் கீழ் வரும் ஜூலை மாதம் தொடங்கி தென்கிழக்காசியா, தென்மேற்காசியா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கு ஜப்பான் ஒரு கோடியே பத்து லட்சம் தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.


