ஷா ஆலம், ஜூன் 25- நகர்ப்புறங்களில் அதிக அளவிலான விவசாய பொருள் விற்பனை மையங்களை திறக்க சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக விவசாயம் மற்றும் விவசாய அடிப்படைத் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக நகர்ப்புறங்கள் விளங்குவதும் விவசாய பொருள்களுக்கு நகர்ப்புறங்களில் வரவேற்பு அதிகம் உள்ளது இதற்கு காரணமாகும் என அவர் சொன்னார்.
சந்தை விலையைக் காட்டிலும் இத்தகைய மையங்களில் குறைவான விலையில் விவசாயப் பொருள்கள் விற்கப்படுவதும் இதற்கான காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
புறநகர்ப் பகுதிகளில் அதிகமான விவசாய சந்தைகள் திறக்கப்படுவதால் அப்பகுதிகளில் விவசாய பொருள்கள் அதிகளவில் குவியும் பிரச்னையைத் தவிர்க்க தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இங்குள்ள மேரு ஜெயாவில் சிலாங்கூர் பரிவு விவசாய பொருள் விற்பனை மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தாமான் மேரு ஜெயா தவிர்த்து சிலாங்கூர் மாநிலத்தில் 12 விவசாய பொருள் விற்பனை மையங்கள் உள்ளன. அவை பின்வருமாறு-
- விஸ்மா பி.கே.பி.எஸ்.
- ஷா ஆலம் செக்சன் 7, பி.கே.பி.எஸ். சேகரிப்பு மையம்
- ஷா ஆலம் செச்சன் 9, பி.கே.பி.எஸ். சேகரிப்பு மையம்
- ஷா ஆலம் செக்சன் 13, பி.கே.பி.எஸ். சேகரிப்பு மையம்
- கோல லங்காட், தஞ்சோங் 12, பி.கே.பி.எஸ். நடவடிக்கை மையம்
- பாங்கி, அக்ரோசெல் நடவடிக்கை மையம்
- டிங்கில், கூட்டரசு விவசாய சந்தை வாரியம் (ஃபாமா) நடவடிக்கை மையம்
- பூச்சோங் ஃபாமா நடவடிக்கை மையம்
- கிளானா ஜெயா ஃபாமா நடவடிக்கை மையம்


