ANTARABANGSA

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,841 ஆக உயர்வு

24 ஜூன் 2021, 1:12 PM
நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 5,841 ஆக உயர்வு

ஷா ஆலம், ஜூன் 24- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட இன்று மேலும் அதிகரித்துள்ளது. இன்று நாட்டில் 5,841 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு கூறியது.

நேற்றை விட இன்று 597 நேர்வுகள் அதிகமாகியுள்ளதை இந்த தரவுகள் காட்டுவதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.

சிலாங்கூரில் 2,072 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் மற்ற மாநிலங்களில் பதிவான எண்ணிக்கை மூன்று இலக்கங்களாக உள்ளன.

நெகிரி செம்பிலானில் 781 சம்பவங்களும் சரவாவில் 581 சம்பவங்களும் கோலாலம்பூரில் 552 சம்பவங்களும் ஜொகூரில் 346 சம்பவங்களும் கெடாவில் 271 சம்பவங்களும் லவுவானில் 212 சம்பவங்களும் பதிவாகின.

 அதற்கு அடுத்த நிலையில் சபா (203), கிளந்தான் (135), பினாங்கு (108), பேராக் (120), பகாங் (162), திரங்கானு (29), புத்ரா ஜெயா (17), பெர்லிஸ் (5) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.