ஷா ஆலம், ஜூன் 24- இம்மாதம் 28ஆம் தேதி முதல் சிலாங்கூரிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தடுப்புசி செலுத்தும் மையங்கள் திறக்கப்படவுள்ளன. சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக செல்கேட் ஹெல்த்கேர் சென். பெர்ஹாட் நிறுவனம் இந்த மையங்களை திறக்கிறது.
பெட்டாலிங் ஜெயா டிரோப்பிகானா மால், பாங்கி ஈவோ மால், கிளானா ஜெயா பி.கே.என்.எஸ். காம்ப்ளெக்ஸ், ஷா ஆலம் டி பால்மா ஹோட்டல், புக்கிட் ஜாலில் அவுரா மால் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் செயல்படும் என்று செல்கேட் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
இது தவிர, கீழ்க்கண்ட சமூக மண்டபங்களிலும் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் திறக்கப்படும்
- டேவான் ஸ்ரீ சியான்தான், ஜாலான் சுங்கை துவா, தாமான் செயாயாங் பத்து கேவ்ஸ்
- டேவான் டத்தோ அகமது ரசாலி, ஜாலான் அம்பாங், கம்போங் மிலாயு அம்பாங்
- டேவான் ஸ்ரீ செம்பாக்கா, பெர்சியாரான் சவுஜானா இம்பியான், காஜாங்
- செரின் சமூக மண்டபம், சைபர் ஜெயா,
- டேவான் பந்திங் பாரு, 53, ஜாலான் பிபி 5/2, தாமான் பந்திங் பாரு, பந்திங்
- கோல சிலாங்கூர் மாவட்ட மன்ற மண்டபம். டேவான் ஓராங் ராமாய் பெஸ்தாரி ஜெயா, தாமான் ஸ்ரீ .இண்டா, பெஸ்தரி ஜெயா
தடுப்பூசி செலுத்தும் மையங்களாக செயல்படும் செல்கேர் கிளினிக்குகள் வருமாறு-
- செந்தோசா, கிள்ளான்
- பூச்சோங்
- புத்ரா ஜெயா
- யு.எஸ்.ஜே. சென்ட்ரல், சுபாங் ஜெயா
- செக்சன் 13, ஷா ஆலம்
- ஜெயா ஒன், பெட்டாலிங் ஜெயா
- ஸ்கைபார்க், சுபாங்
- கே.எல்.ஒ. நிலையம் (பழைய இரயில் நிலையம்), கோலாலம்பூர்
- மெனாரா யு.பி.என். கோலாலம்பூர்
- மெனாரா ஹப் செங், கோலாலம்பூர்
- மொனாரா ஒலிம்பியா, கோலாலம்பூர்
- ரோஹாஸ் பெர்காசா, கோலாலம்பூர்
- மெனாரா வேர்ல்ட்வைட், கோலாலம்பூர்
தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கு உதவும் வகையில் செல்கேட் நிறுவனம் மாநில அரசுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை நல்கி வரும் என்று அவ்வறிக்கை கூறியது.
நிர்ணயிக்கப்பட்ட தேதியில் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களும் செயல்படத் தொடங்குவதை உறுதி செய்வதே தங்களின் தலையாயப் பணி என்றும் அது குறிப்பிட்டது.


