கோலாலம்பூர், ஜூன் 24- இம்மாதம் 24 ஆம் தேதி வரை நாட்டில் 18 லட்சத்து 5 ஆயிரத்து 367 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்து 49 ஆயிரத்து 133 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா டிவிட்டர் வழி தெரிவித்தார்.
இதன் வழி தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 54 ஆயிரத்து 500 ஆக ஆகியுள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரில் 237,662 பேர் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் ஜொகூர் (192,501), சரவா (189,280), பேராக் (165,932), மற்றும் கோலாலம்பூர் (157,393) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அவர் கூறினார்.
தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கை நேற்று 252,773 ஆகவும் நேற்று முன்தினம் 250,529 ஆகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.


