ஷா ஆலம், ஜூன் 23- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறி முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலம் ஒன்று வழிபாடுகளை நடத்த முயன்றது தொடர்பில் ஷா ஆலம் மாவட்ட போலீசார் புகாரை பெற்றுள்ளனர்.
இப்புகாரைத் தொடர்ந்து சோதனை மேற்கொள்வதற்காக கோவிட்-19 கண்காணிப்பு குழு ஒன்று சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
எனினும், அனைத்து வழிபாட்டுத தலங்களும் எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிப்பது அந்த சோதனையில் தெரிய வந்ததாக கூறிய அவர், இத்தகைய குற்றங்கள் தொடர்பில் இதுவரை யாருக்கும் குற்றப்பதிவு வழங்கப்படவில்லை என்றார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் எந்த சமய நிகழ்வும் நடத்தப்படக்கூடாது என தேசிய பாதுகாப்பு மன்றம் உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் நீங்கலாக 12 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மட்டுமே வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.


