ஷா ஆலம், ஜூன் 22- நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த இரு தினங்களாக ஐயாயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. இன்று 4,743 பேர் அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சிலாங்கூரில் அந்நோய் கண்டவர்களின் எண்ணிக்கை 1,566 ஆக பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார். நேற்று நாடு முழுவதும் 4,611 சம்பவங்களும் சிலாங்கூரில் 1,346 சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டன.
நாட்டில் இதுவரை 705, 762 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் சிலாங்கூரில் அந்த எண்ணிக்கை 231,047 ஆக உள்ளது.
மாநில வாரியாக நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
கோலாலாம்பூர், (635), நெகிரி செம்பிலான் (585), சரவா (507), ஜொகூர் (239), பினாங்கு (195), சபா (193), மலாக்கா (167), கிளந்தான் (165), கெடா (142), பகாங் (131), லபுவான் (104), பேராக் (68), திரங்கானு (37), புத்ரா ஜெயா (7), பெர்லிஸ் (2).


