ஷா ஆலம், ஜூன் 21- நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4,611 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை மொத்தம் 701,019 பேர் நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட தரவுகளின் படி சிலாங்கூர் அதிகப்பட்சமாக அதாவது 1,346 சமபவங்களை பதிவு செய்துள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் சரவா (682), பேராக் (435), நெகிரி செம்பிலான் (437), ஜோகூர் (314), கோலாலம்பூர் (310), கிளந்தான் (219), கெடா (182), சபா (166), பினாங்கு (84), பகாங் (50), திரங்கானு (18), புத்ரா ஜெயா (15), பெர்லிஸ் (0) ஆகிய மாநிங்கள் உள்ளன.


