HEALTH

கோவிட்-19 பரிசோதனை: 2,702 மாதிரிகள் சேகரிப்பு- 197 பேருக்கு நோய்த் தொற்று

21 ஜூன் 2021, 10:11 AM
கோவிட்-19 பரிசோதனை: 2,702 மாதிரிகள் சேகரிப்பு- 197 பேருக்கு நோய்த் தொற்று

ஷா ஆலம், ஜூன் 21- வார இறுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில்  2,702 பேரிடம் ஆண்டிஜென்(ஆர்.டிகே.-ஏஜி) விரைவு சோதனைக் கருவி வழி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 

ஸ்ரீ செத்தியா மற்றும் தாமான் மேடான் தொகுதிகளில் 1,435 பேரிடமும் சுங்கை துவா, தாமான் டெம்ப்ளர் மற்றும் கோம்பாக் செத்தியா தொகுதிகளில் எஞ்சியோரிடமும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக கிளினிக் செல்கேர் நிர்வாகி முகமது நோர் முகமது நாசீர் கூறினார்.

அச்சோதனைக்குட்படுத்தப்பட்டவர்களில் 196 பேர் அல்லது ஆறு விழுக்காட்டினர் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்றவர்களில் பலர் கோவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாவர்.  இச்சோதனையில் நோய் தொற்று கண்டறியப்பட்ட 18 முதல் 40 வயதுக்குட்பட்ட பலர் நோய்க்கான எந்த அறிகுறியையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்று அதிகம் உள்ள தொகுதிகள் மற்றும் தொழில் துறைகளை இலக்காக கொண்டு மூன்றாம் கட்ட கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள சிலாங்கூர் அரச ஒரு கோடியே 70 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த மூன்றாம் கட்ட சோதனையின் ஒரு பகுதியாக வரும் 26ஆம் தேதி உலு கிளாங் தொகுதியிலும் 27 ஆம் தேதி புக்கிட் அந்தாரா பங்சா தொகுதியிலும் பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.