ஷா ஆலம், ஜூன் 21- இம்மாதம் 11ஆம் தேதி முதல் இதுவரை நாட்டில் வி.ஒ.சி. எனப்படும் ஆபத்து மிகுந்த 22 புதிய வகை சார்ஸ்-கோவி-2 நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டன.
அந்த 22 ஆபத்தான நோய்த் தொற்றுகளில் 14 பேட்டா வகைகையும் 8 டெல்டா வகையையும் சேர்ந்தவை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சிலாங்கூர், சபா, திரங்கானு மற்றும் கெடாவில் பேட்டா வகை நோய்த் தொற்றை உள்பட்டுத்திய தலா மூன்று சம்பவங்களும் பேராக், ஜொகூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சம்பவமும் பதிவானதாக அவர் சொன்னார்.
ஜொகூர் மற்றும் லவுபானில் தலா இரு டெல்டா வகை நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்ட வேளையில் பினாங்கு மற்றும் பெர்லிசில் தலா ஒரு சம்பவம் பதிவானது என்றார் அவர்.
நேற்று முன்தினம் வரை நாட்டில் ஆபத்து மிகுந்த 183 வி.ஒசி. நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
அரசாங்கம் சார்ஸ்-கோவி-2 வகை நோய்த் தொற்றுகளை அடையாளம் காணும் முயற்சியல் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறிய அவர், இந்நோய்த் தொற்று சமூகத்தில் பரவுவதை தடுப்பதற்காக கோவிட்-19 பரிசோதனைகளை அதிகளவில் நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.


