ECONOMY

கொரோனா தடுப்பூசி முதல் நடமாடும் பிரிவு

20 ஜூன் 2021, 11:26 AM
கொரோனா தடுப்பூசி முதல் நடமாடும் பிரிவு

ஷா ஆலம், ஜூன் 20:  சிலாங்கூர் மாநிலத்தில், குறிப்பாக ஒதுக்குபுறமான பகுதிகளுக்கும் கரடுமுரடான பாதைகளிலும் சென்று கோரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் விரைந்து செயல்பட உதவும் வண்ணம், திருத்தி அமைக்கப் பட்ட நான்கு சக்கர வாகனத்துடன், நோய்தடுப்பு பணி குழு நோய் செயல் படவுள்ளது.

தொற்றுநோயிக்கு எதிரான போராட்டத்தினை விரைவுபடுத்த இம்மாதிரி வாகனம் உதவும் என்ற அவர் மாநிலத்தின் முதல் மொபைல் தடுப்பூசி மையமாக (பிபிவி) மாற்றியுள்ள வாகனத்தை பார்வையிட்டப்பின் கூறினார்

கோலா லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் (பி.கே.டி) மற்றும் மோரிப் மாநில சட்டமன்றம் (டி.யூ.என்) கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (எம்.பி.கே.கே) ஆகியவற்றுடன் இணைந்து இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

மொபைல் பிபிவி பொதுமக்களுக்கு, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் வீடற்ற நோயாளிகளுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதை எளிதாக்கும் என்று மோரிப் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் தெரிவித்தார்.

தடுப்பூசி போடப் பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோரிப் சட்டமன்ற தொகுதியில் இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பி.கே.டி கோலா லங்காட்டுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

"இந்த முயற்சி, கோவிட் - 19 தொற்றை குறைக்க உதவும், மேலும் மோரிப் சட்டமன்ற தொகுதி பச்சை மண்டல அடையாளத்தை விரைந்து பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நேற்று பந்திங் நகர்ப்புற சுகாதார கிளினிக்கில் பிபிவி அமைப்பை தொடக்கி வைத்தப் பொழுது இதனை கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் மேலும் கூறுகையில், இந்த வசதி தேவைப்படும் நபர்கள் பி.கே.டி மூலம் செயலாக்கப்படுவதற்கு முன்னர் பெயர்களின் பட்டியலை சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களிடம்  வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்

இத்திட்டத்தில் அதிக கோவிட் -19 தொற்றுகளை பதிவுசெய்த கிராமப்புறங்கள், ஒராங் அஸ்லி கிராமங்கள் மற்றும் உட்புற வட்டாரங்களில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது  என்று ஹஸ்னுல் விளக்கினார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.