ECONOMY

பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் 100 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

17 ஜூன் 2021, 5:56 AM
பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் 100 குடும்பங்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

ஷா ஆலம், ஜூன் 17- பத்து கேவ்ஸ் வட்டாரத்திலுள்ள நான்கு குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு செலாயாங் நகராண்மைக் கழகம் உணவுப் பொருள்களை வழஙகியது.

தாமான் பிடாரா, தாமான் செலாயங் ஜெயா, செலாயாங் உத்தாமா மற்றும் தாமான் ஸ்ரீ மெலாத்தி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த உதவிப் பொருள்களைப் பெற்றனர்.

இந்த உதவிப் பொருள்களை நகராண்மைக்கழக உறுப்பினர் யு சின் ஒங் மற்றும் நகராண்மைக் கழகத்தின் இடைக்கால தலைவர் செரேமி தர்மான் ஆகியோர் வழங்கினர்.

கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில்  சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கு இந்த அத்தியாவசிய உணவுப் பொருள்கள் ஓரளவு உதவியாக இருக்கும் என்று அறிக்கை ஒன்றில் நகராண்மைக்கழகம் தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.