ஷா ஆலம், ஜூன் 16- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு உணவுக் கூடை திட்டத்தின் உதவுவதில் மிகவும் பரிவுடன் நடந்து கொண்ட மாநிலம் சிலாங்கூர் என்று அகில மலேசிய டாக்சி ஓட்டுநர் கூட்டமைப்பு புகழாரம் சூட்டியது.
டாக்சி தொழில்துறையைச் சேர்ந்த அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்களும் சிலாங்கூரை பின்பற்றி தங்களிடம் பரிவு காட்டும் என நம்புவதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் கமாருடின் முகமது ஹூசேன் கூறினார்.
கோலாலம்பூர் கூட 200 உணவுக் கூடைகளை வழங்குகிறது. எனினும் அது போதவில்லை. இவ்விஷயத்தில் சிலாங்கூர் பரிவுடனும் நேர்மையாகவும் நடந்து கொள்கிறது. அது வழங்கும் உதவிகூட அதிகமாக உள்ளது என்றார் அவர்.
இச்சங்கம் சுமார் எழாயிரம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக கூறிய அவர், உதவிகள் தேவைப்படுவோருக்கு கிடைப்பதை உறுதி செய்ய தங்கள் கூட்டமைப்புடன் ஒத்துழைப்பை நாடும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினரை கேட்டுக் கொண்டார்.
முன்பு ஊராட்சி மன்றங்கள் வாயிலாக இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டன. சிலருக்கு அதிகமாக கிடைத்த து. சிலருக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆகவே, வீண் விரயத்தை தவிர்க்க உதவிப் பொருள்களை பகிர்ந்தளிப்பதில் சீரான முறை அமல் செய்யப்படுவது அவசியம் என்றார் அவர்.


