கோலாலம்பூர், ஜூன் 11- நாட்டில் இன்று 6,849 கோவி-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று இந்த எண்ணிக்கை 5,671 ஆக இருந்தது.
இதன் வழி நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 646,411 ஆக உயர்ந்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அதிக நோய்த் தொற்று உள்ள மாநிலங்கள் பட்டியலில் சிலாங்கூர் 2,558 சம்பவங்களுடன் முதலிடம் வகிப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூர் (884), சரவா (699), நெகிரி செம்பிலான் (685) , ஜொகூர் (426), சபா (309), கிளந்தான் (248) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


