ஷா ஆலம், ஜூன் 10- கால்நடைகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் பெரியம்மை நோய் ஏற்படுவது குறித்த அச்சம் காரணமாக உள்நாட்டில் உற்பத்தியாகும் மாட்டிறைச்சி அல்லது எருமை இறைச்சியை உண்பதில் தயக்கம் கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு முன்னர் அங்கீகாரம் பெற்ற பரிசோதகர்களைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் அந்த உணவுகள் உண்பதற்கு பாதுகாப்பானவையே என்று சிலாங்கூர் கால்நடை சேவைத் துறையின் இயக்குநர் டாக்டர் ஹஸ்சுசானா காலில் கூறினார்.
இறைச்சியின் மீது ஓட்டப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ சான்று முத்திரையைக் கொண்டு அந்த இறைச்சியின் நம்பகத்தன்மையை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
மாநிலத்தில் முதன் முறையாக கால்நடைகளுக்கு பெரியம்மை பரவியதை அதிகாரிகள் கடந்த 2ஆம் தேதி கண்டுபிடித்தனர்.


