ECONOMY

கித்தா சிலாங்கூர் 2.0: மக்கள் நலன் காக்க, வாழ்க்கைச் சுமையைப் போக்க 14 திட்டங்கள்

9 ஜூன் 2021, 10:02 AM
கித்தா சிலாங்கூர் 2.0: மக்கள் நலன் காக்க, வாழ்க்கைச் சுமையைப் போக்க 14 திட்டங்கள்

ஷா ஆலம், ஜூன் 9- மக்களின் நலன் காப்பதற்கும் அவர்களின வாழ்க்கைச் சுமையைப் போக்குவதற்கும் கித்தா சிலாங்கூர் 2.0 திட்டத்தின் முதலாவது வியூகத்தின் கீழ் 14 உதவித் திட்டக்ளை சிலாங்கூர் அரசு அமல் செய்கிறது.

முதலாவது வியூகத்தின் கீழ் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்த திட்டங்கள் வருமாறு-

  1. உணவுக் கூடை திட்டம்

பி40 குறைந்த வருமானம் பெறுவோர்,  பள்ளி பஸ் மற்றும் வேன் ஓட்டுநர்கள், டாக்சி  மற்றும் சொந்த பஸ் ஓட்டுநர்கள், தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் , வேலை இழந்தவர்கள், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கோவிட்-19 நோயாளிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

- மக்கள் நட்புறவுத் திட்டத்தின் கீழ் செலவு செய்வதற்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு ஒரு லட்சம் வெள்ளியாக அதிகரிப்பு

- இதே திட்டங்களை அமல் செய்ய மாநிலத்திலுள்ள பக்கத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா முப்பதாயிரம் வெள்ளி வழங்கப்படுகிறது.

  1. கோவிட்-19 நோய்த் தொற்றால் மரணமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு உதவி நிதி

- கோவிட்-19 நோய்த் தொற்றால் சிலாங்கூரில் உயிழந்தவர்களுக்கு மரண சகாய நிதியாக வெ. 1,000  வழங்கப்படும்.

- இந்நோக்கத்திற்காக 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  1. மாற்றுத் திறனாளிகளுக்கு வெ. 500 சிறப்பு உதவி நிதி

- ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் இந்த உதவித் தொகை திட்டத்திற்காக வெ. 600,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  1. ஹிஜ்ரா சிலாங்கூர் கடன் தொகையை திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம்

- ஒன்றரை மாதங்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டத்தின் மூலம் ஹிஜ்ரா சிலாங்கூர் அமைப்பிடம் கடன் பெற்ற சுமார் 40,000 பேர் பயன்பெறுவர். 1 கோடியே 13 லட்சத்து 50 வெள்ளியை இந்த கடன் ஒத்தி வைப்புத் திட்டம் உள்ளடக்கியுள்ளது.

  1. குடும்ப வன்முறை தொடர்பில் புகார் செய்ய சிறப்பு தொலைபேசி சேவை

- இந்நோக்கத்திற்காக அவசர புகார் மையத்தை உருவாக்குவதற்கு ஒரு லட்சம் வெள்ளி ஒதுக்கிடு செய்யப்படும். சிலாங்கூர் மகளிர்  மேம்பாட்டு அமைப்பு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

  1. 2021ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மாணவர்கள் கல்விக் கடனுதவியை திரும்பச் செலுத்துவது ஒத்தி வைப்பு

- சுமார் 13 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் மூலம் 1,300 மாணவர்கள் பயன் பெறுவர்.

- சம்பந்தப்பட்ட மாணவர்கள் இவ்வாண்டு தங்கள் படிப்பை முடித்தவுடன் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான ஆறு மாத கால தவணை ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்.

7.சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்டம்

-இவ்வாண்டில் தேர்வு எழுதவிருக்கும் சுமார் ஐம்பதாயிரம் மாணவர்களுக்கு உதவும் வகையில் அச்சடிக்கப்பட்ட மாதிரி வினாத் தாட்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

  1. ePTRS.my  அகப்பக்கம்

- இலக்கவியல் முறையிலான டியூஷன் கல்வித் தளத்தை உருவாக்க மாநில அரசு ஐந்து லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.  எஸ்.பி.எம். தேர்வு எழுதவிருக்கும் சுமார் 20,000 மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுவர்.

  1. பி.பி.ஆர். வாடகை மற்றும் ஸ்மார்ட் வாடகை ஒத்தி வைப்பு

- பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்ட வீடுகளில் குடியிருக்கும் 2,632 பேரும் ஸ்மார்ட் சேவை திட்டத்தில் பங்கேற்ற 477  பேரும் ஜூலை மாதத்திற்கான வாடகையை செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுவர்.

  1. தொடக்க கல்வி {  பாலர் பள்ளி} ஆசிரியர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு உதவித் திட்டம். 

- இத்திட்டத்தின் வழி பாலர் பள்ளியை நடத்தும் 1,018 பேருக்கு  தலா 450 வெள்ளியும் 10,197 ஆசிரியர்களுக்கு தலா 150 வெள்ளியும் வழங்கப்படும்.

  1. யாயாசான் சிலாங்கூர் கல்விக் கடனுதவியை திரும்பச் செலுத்துவது ஒத்தி வைப்பு

- யாயாசான் சிலாங்கூர் ஏற்பாட்டு ஆதரவில் பயன்று வரும் 286 மாணவர்கள் தங்களின் கல்விக் கடனுதவியை திரும்பச் செலுத்துவதற்கான காலக் கெடு வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

- யாயாசான் சிலாங்கூர் ஏற்பாட்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் அந்த வாரியத்துடன் தொடர்பு கொண்டு விவாதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  1. சிலாங்கூர் பட்டதாரி மாணவர்கள் உதவித் திட்டம்

- சுமார் 7,500 பட்டதாரி மாணவர்களுக்கு அத்தியாசிய உணவுப் பொருள்களை வழங்குவதற்காக மாநில அரசு 15 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

13- சிலாங்கூர் இணைய டாத்தா சேவை

- மாதம் 35 வெள்ளி மதிப்பில் எல்லையற்ற இணையச் சேவையை வழங்கக்கூடிய சிம் கார்டுகளை இலக்காக கொள்ளப்பட்ட சுமார் 70,000 பேருக்கு வழங்கப்படும். இந்த சிம் கார்டுகளுக்கு பயனாளர்கள் வெறும் 20 வெள்ளியை மட்டுமே வழங்க வேண்டும். எஞ்சிய 15 வெள்ளியை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்.

  1. எம்40 பிரிவினருக்கான சிலாங்கூர் இணைய சேவைத் திட்டம்

- மாநில அரசு ஏற்படுத்தித் தரும் எட்டு தொகுப்பு திட்டங்களில் வாடிக்கையாளர் ஆவதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்கள் மாதம் 10 வெள்ளி முதல 30 வெள்ளி வரை மிச்சப்படுத்தலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.