ஷா ஆலம் ஜூன் 7 ;- இன்று ஜூன் 7ஆம் தேதி காலை 9,00 முதல் கோலசிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள ஜெராம் சட்டமன்ற தொகுதிகளிலும் உலு சிலாங்கூர் பத்தாங்காளியிலும் நாளை செவ்வாய்கிழமை ஜூன் 8 ஆம் தேதி அன்று காலை 9.00 முதல் உலு பெர்ணம் மற்றும் கோலக்குபூ பாரு சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு அவரவர் குடும்ப நலன் காக்க உதவும்படி கேட்டுக்கொண்டார் மந்திரி புசார்.
| ஜூன் 7 – ஜெராம் தொகுதி- கம்போங் புக்கிட் கூச்சிங் தெங்கா சமூக மண்டபம் |
ஜூன் 7- பத்தாங்காளி தொகுதி- புக்கிட்செந்தோசா சமூக மண்டபம்
ஜூன் 8- உலு பெர்ணம் தொகுதி- உலு பெர்ணம் பொது மண்டபம்
ஜூன் 8- கோலக்குபூபாரு தொகுதி- கோலக்குபூபாரு மெர்டேக்கா மண்டபம்
மேற்படி இடங்களில் நடைபெறும் பரிசோதனைகளில் தவறாது கலந்துக் கொள்ளும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்
நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று சமூகத்தில் பரவுவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறியை கொண்டிராதவர்களை கண்டு பிடிக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் அதிக அளவில் பரிசோதனை இயக்கங்களை நடத்துகிறோம் என்றார் அவர்.
.


