ஷா ஆலம், ஜூன் 6 - தொற்றுநோய் வேகமாக பரவி வருவதால், கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை விரைவுபடுத்துமாறு அரசாங்கம் வலியுறுத்தப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், புத்ராஜெயா தடுப்பூசிகளை பெற விரும்புவோர் மீது கவனம் செலுத்த வேண்டும், தடுப்பூசிகளைப் பெற பதிவு செய்துள்ளவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுவதை உறுதி செய்யவேண்டும்.
"நீங்கள் தடுப்பூசிகளை ஆர்டர் செய்வதில் மெதுவாக செயல் படுகிறீர்கள். மக்கள் நீண்ட காலமாக அவதிப்படுகிறார்கள், அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசிகளுக்கு எதிரான குரல் சிறியது அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை விட்டு, அரசாங்கம், பெரும்பாலானவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
இன்று ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்ட பார்ட்டி கெடிலன் ராக்யாட் (பி.கே.ஆர்) இன் சிறப்பு காணொளியில் "அவர்களைக் காப்பாற்றுவது எங்கள் பொறுப்பு" என்று அவர் கூறினார்.
இது தவிர, கோவிட் -19 தடுப்பூசியை தாங்களே வாங்கும் திறன் கொண்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் அதற்கான அனுமதியை வழங்குமாறு அன்வார் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
" இது அவசர தேவை, அரசாங்கத்தின் அலட்சிய போக்கால் மக்கள் இறந்து போகிறார்கள், எனவே விரைவாக அவர்களுக்கு அனுமதியை கொடுங்கள். அவர்கள் அதை வாங்கட்டும். அவர்களுக்கு வாங்க திறன் இருக்கும்போது நீங்கள் ஏன் அதனை தாமதப்படுத்த வேண்டும் என்று கேட்டார் அவர்.


