கோலா சிலாங்கூர், ஜூன் 6 – சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற இலவச கோவிட் -19 நோய்த் தொற்று பரிசோதனை முகாம்களை பார்வையிட்டார்.
மதியம் 2.45 மணிக்கு பண்டார் பாரு கோல சிலாங்கூரில் உள்ள கோல சிலாங்கூர் மாவட்ட கவுன்சில் (எம்.டி.கே.எஸ்) மண்டபத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார், அதைத் தொடர்ந்து ஈஜோக்கில் உள்ள கம்பங் புக்கிட் பெடோங் பொது மண்டபத்திற்கு விஜியம் புரிந்தார்.
கோவிட் -19 நோய்த்தொற்றைக் கண்டறிய மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச சமூக பரிசோதனைத் திட்டங்களை உள்ளூர் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டற்கு அவர்களை அமிருடின் பாராட்டினார்.
"இந்த இரண்டு இடங்களில் 300 முதல் 500 நபர்கள் வரை பரிசோதனையில் பங்கேற்றனர் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், இதனால் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து மக்களின் விழிப்புணர்வு மற்றும் ஆபத்தினை உணர்த்துள்ளனர் என்பதை காட்டுவதாக கூறினார்.
"இந்த நோய் பரிசோதனையின் மூலம் ஒவ்வொரு இடத்திலும் உள்ள நோய்த் தொற்றின் அளவை மதிப்பிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
ஏறக்குறைய ஒரு மணி நேர பயணத்தின் போது, செல்கேர் கிளினிக் ஊழியர்களால் நடத்தப்பட்ட பரிசோதனைகளை அமிருதின் கண்டார்.
பொதுமக்கள் பரிசோதனைக்கு வரும் முன், காலை 9 மணி முதல், பரிசோதனைகாக SELangkah பயன்பாட்டின் மூலம் பதிவு செய்துக்கொண்டதுடன் நடமாட்ட கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு (SOP கள்) இணங்கி நடப்பதையும், அதே நேரத்தில் சமூக இடைவெளியை பராமரித்து அவர்களின் உடல் வெப்பநிலையையும் சரிபார்ப்பதையும் சிலாங்கூர் கினி நடத்திய ஒரு ஆய்வில் கண்டறிந்தது.
சிலாங்கூர் அரசாங்கம் மே 8 முதல் ஜூன் 10 வரை 56 மாநிலத் தொகுதிகளில் இலவச பரிசோதனைகளைத் தொடங்குவதன் மூலம் கோவிட் -19 நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.


