HEALTH

நாட்டில் நேற்று  7,452 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

6 ஜூன் 2021, 1:57 AM
நாட்டில் நேற்று  7,452 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 6- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்றைய முதல் நாளை  விட சற்று குறைந்து 7,452 ஆக பதிவானது. முந்தாநாள்  இந்த எண்ணிக்கை 7,748 ஆக இருந்ததாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதனுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 610,574ஆக உயர்ந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 3,509 சம்பவங்களுடன் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ள வேளையில் அதனை அடுத்து கோலாலம்பூர் (678), நெகிரி செம்பிலான் (843), சரவா (651), கிளந்தான் (312), ஜோகூர் (412), பினாங்கு (370), கிளந்தான் (263), பகாங் (286), கெடா (263), பேராக் (252) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அவர் சொன்னார்.

மலாக்காவில் 206 சம்பவங்களும் லவுவானில் 205 சம்பவங்களும் திரங்கானுவில் 190 சம்பவங்களும் புத்ரா ஜெயாவில் 12 சம்பவங்களும் பெர்லிசில் 4 சம்பவங்களும் பதிவானதாக அவர்  மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.