ஷா ஆலம், ஜூன் 5- இன்று தொடங்கி வரும் 10ஆம் தேதி வரை கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ளும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த 12 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் பரிசோதனை இயக்கங்களின் பட்டியலையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதி வருமாறு-
ஜூன் 5-
சுங்கை பூரோங் தொகுதி- டத்தோ ஹொர்மாட் மண்டபம், தஞ்சோங் காராங்
பெர்மாத்தாங் தொகுதி- கம்போங் சுங்கை குலாங்-குலாங் மண்டபம், தஞ்சோங் காராங்
ஜூன் 6-
புக்கிட் மெலாவத்தி தொகுதி- எம்.டி.கே.எஸ். மண்டபம், பண்டார் பாரு கோலா சிலாங்கூர்
ஈஜோக் தொகுதி- கம்போங் புக்கிட் பாடோங் சமூக மண்டபம்
ஜூன் 7
ஜெராம் தொகுதி- கம்போங் புக்கிட் கூச்சிங் தெங்கா சமூக மண்டபம்
பத்தாங் காலி தொகுதி- புக்கிட் செந்தோசா சமூக மண்டபம்
ஜூன் 8
உலு பெர்ணம் தொகுதி- உலு பெர்ணம் சமூக மண்டபம்
கோல குபு பாரு தொகுதி- டேவான் மெர்டேக்கா
ஜூன் 9
சுங்கை பாஞ்சாங் தொகுதி- ஸ்டேடியம் சுங்கை புசார்
சபாக் தொகுதி- டேவான் துன் ரசாக்
ஜூன் 10
சுங்கை ஆயர் தாவார் தொகுதி- டேவான் பாகான் நக்கோடா ஓமார்
சிகிஞ்சான் தொகுதி- டேவான் ஸ்ரீ சிகிசிஞ்சான்
இந்த இலவச பரிசோதனை இயக்கம் சீராகவும் விரைவாகவும் மேற்காள்ளப்படுவதற்கு ஏதுவாக எனும் அகப்பக்கம் வாயிலாக செலங்கா செயலியில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


