ஷா ஆலம் ஜூன் 5 ;- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் மேற்கொள்ளக் பட்டுவரும் கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 87,903 பேர் பங்கேற்றுள்ளனர் அதில் 3,168 பேருக்கு நோய்த் தொற்று அபாயம் உள்ளது அறியப் பட்டுள்ளது.
இன்று தஞ்சோங்காராங் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள சுங்கை பூரோங் மற்றும் பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதிகளில் நடைபொறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு நமது குடும்ப நலன் காப்போம்.
கொரோனா 19 வைரஸை துடைத்தொழிக்க முன் வரும்படி கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் எஸ்.டி.எப்.சி. எனப்படும் சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது அழைக்கிறார்.
சுங்கை பூரோங்கில் சட்டமன்ற தொகுதியில் டத்தோ ஹெர்மாட் மண்டபம் தஞ்சோங் காராங், மற்றும் பெர்மாத்தாங் தொகுதியில் – சுங்கை கூலாங்-கூலாங் கிராம மண்டபம் தஞ்சோங் காராங் ஆகிய இடங்களில் இன்று ஜூன் 5 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறுகிறது.
நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று சமூகத்தில் பரவுவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறியை கொண்டிராதவர்களை கண்டு பிடிக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் அதிக அளவில் பரிசோதனை இயக்கங்களை நடத்துகிறோம் என்றார் அவர்.
இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் எனும் http://screening.selangkah.my அகப்பக்கம் வாயிலாக செலங்கா செயலியில் பதிந்து கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


