ஷா ஆலம், மே 31- நாட்டில் இன்று 6,824 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று இந்த எண்ணிக்கை 6,999 ஆக இருந்தது.
சிலாங்கூரில் 2,111 சம்பவங்களும் கிளந்தானில் 695 சம்பவங்களும் சரவாவில் 645 சம்பவங்களும் ஜொகூரில் 489 சம்பவங்களும் கெடாவில் 464 சம்பவங்களும் பதிவானதாக சுகாதார அமைச்சு கூறியது.


