கோலாலம்பூர், மே 31- நேற்று வரை மொத்தம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 145 பேர் இரண்டு டோஸ் மருந்தளவு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.
மேலும், 18 லட்சத்து 60 ஆயிரத்து 864 பேர் தங்களுக்கான முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார். இதன் வழி தடுப்பூசி இயக்கத்தில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 13 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
சிலாங்கூரில் 139,427 பேரும் சரவாவில் 109,934 பேரும் பேராக்கில் 97,558 பேரும் கோலாலம்பூரில் 94,399 பேரும் ஜொகூரில் 92,231 பேரும் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
நேற்று வரை 49.9 விழுக்காட்டினர் அதாவது 1 கோடியே 21 லட்சத்து 17 ஆயிரத்து 91 பேர் தடுப்பூசியைப் பெறுவதற்கு பதிந்து கொண்டுள்ளனர். சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 32 லட்சத்து 23 ஆயிரத்து 832 பேர் இந்த பதிவினை செய்துள்ளனர் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


