ஷா ஆலம், மே 27- கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறார்களில் 10 முதல் 20 விழுக்காட்டினர் ஒன்று முதல் ஒன்பது வயது வரையிலானவர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பால்ய வயதினர் இந்நோய்த் தொற்றுக்கு எளிதில் இலக்காவதை இந்த எண்ணிக்கை காட்டுவதாக செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட் சந்தை மற்றும் தொடர்பு பிரிவு அதிகாரி நோராபிடா ஜம்ரி கூறினார்.
முன்பு முதியோர்கள் இந்நோய்த் தொற்றுக்கு இலக்கான நிலையில் தற்போது அந்நிலை மாறி சிறார்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுள்ளது. சிறார்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது இதற்கு காரணமாக விளஙகுகிறது என்றார் அவர்.
சிறிது காலத்திற்கு முன்னர் இந்நோய்த் தொற்றினால் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவதை காணமுடியாது. ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது என அவர் சொன்னார்.
தங்கள் பிள்ளைகளுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ள இத்தகைய இலவச கோவிட் பரிசோதனை இயக்கங்களுக்கு அவர்களை அழைத்து வரும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.
இலவச கோவிட-19 பரிசோதனை மையங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி சிறார்களை அழைத்து வருவோருக்கும் தனி தடங்களை ஏற்படுத்தியுள்ளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


