ஷா ஆலம், மே 26- நாட்டில் இன்று 7,478 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இதுவரை நாட்டில் பதிவான கோவிட-19 சம்பவங்களில் இதுவே மிக அதிகமாகும்.
கடந்த இரு தினங்களாக நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை தொடர்ச்சியாக ஏழாயிரத்தை தாண்டி பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை 533,367 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூரில் இன்று 2,456 சம்பவங்கள் பதிவான வேளையில் கோலாலம்பூரில் 760 சம்பவங்களும் சரவாவில் 640 சம்பவங்களும் பதிவானதாக அவர் சொன்னார்.
மூன்று மாநிலங்களில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 500ஐத் தாண்டியுள்ளது. ஜோகூரில் 587 சம்பவங்களும் கிளந்தானில் 547 சம்பவங்களும் கெடாவில் 542 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
பினாங்கு (430), நெகிரி செம்பிலான் (370), பேராக் (264), மலாக்கா (230), சபா (229), திரங்கானும் (277), பகாங் (171) லபுவான் (49), புத்ரா ஜெயா (29), பெர்லிஸ் (8) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.


