ACTIVITIES AND ADS

புகைப்பட சர்ச்சை- மன்னிப்பு கோரினார் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர்

21 மே 2021, 3:43 AM
புகைப்பட சர்ச்சை- மன்னிப்பு கோரினார் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், மே 21- நோன்பு பெருநாளின் போது கோல லங்காட்டில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற உபசரிப்பு நிகழ்வை சித்திரிக்கும் புகைப்படம் பரவலானது தொடர்பில் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் புர்ஹான் அமான் மன்னிப்பு கோரினார்.

அச்சம்பவத்திற்கு தாம் முழு பொறுப்பேற்று கொள்வதோடு தவற்றை ஒப்புக் கொள்வதாகவும் அவர்  சொன்னார்.

அச்சம்பவம் குறித்து நான் முழு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்றச் சம்பவங்கள் இனியும் நிகழாது எனவும் உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகம் நடத்தி வரும் விசாரணைக்கு தாம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்ட். அகமது ரிட்சுவான்  முகமது நோர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.