ஷா ஆலம்; மே 18 ;-நீண்ட நாட்களாக மாநில மக்களின் நலன் கருதி, செல்கேர் எனும் மருத்துவ உதவி மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு பிரிவினை நடத்திவரும் ஒரு மாநிலம் சிலாங்கூர்.
கோவிட் 19 நோய்த்தொற்றின் ஆரம்பக் காலம் முதல் சிலாங்கூர் மக்கள் மருத்துவச் சேவையில் எவ்வகையிலும் பிற்படுத்தப் படாமலிருப்பதை உறுதி படுத்த பாடுபட்டு வந்த அப்பிரிவு, இப்பொழுது கோவிட் 19 நோய் தடுப்பில் சிலாங்கூர் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வருகிறது.
ஏழை மக்கள் தனியார் மருந்தகங்களில் உயர்ந்த மருத்துவக் கட்டணம் செலுத்தித் தாங்கள் நோய்த் தொற்றுக்கு இலக்காகி உள்ளனரா என்பதனை அறிந்துகொள்ளும் நிலையில் இல்லை.
அதனால் இந்தக் கொள்ளை நோய் பீடிப்பை அறிந்திடாத நோயாளி இலகுவில் அவரின் குடும்பத்தையோ இக்கொள்ளை நோயிக்கு பலியிட வேண்டிய அபாய நிலையில் உள்ளதை உணர்ந்து, மாநில அரசின் யந்திரமாக மக்களுக்கு இலவசமாக நோய் பரிசோதனைகளை மாநிலம் முழுவதிலும் மேற்கொண்டு வருகிறது செல்கேர்.
ஆக, அனைவரும் குறிப்பாக ஏழைகள் அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில், வாக்களிக்கும் சட்டமன்றத் தொகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00மணி வரை நடத்தப்படும் நோய் பரிசோதனையில் பங்குகொள்ள முந்த வேண்டும்.
இட நெருக்கடியையும் ஏமாற்றத்தையும் தவிர்க்கச் செலங்கா செயலி வாயிலாகவும் http://screening.selangkah.my எனும் அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். நமக்கு நாமே உதவிக்கொள்ளும் வகையில் உங்கள் பகுதியில் நடக்கும் இலவச நோய் பரிசோதனை முகாம் குறித்த தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


