HEALTH

சிலாங்கூர் மாநில மக்களுக்கான தடுப்பூசி ஜூன் மாதவாக்கில் விநியோகம்- மந்திரி புசார் தகவல்

19 மே 2021, 1:36 AM
சிலாங்கூர் மாநில மக்களுக்கான தடுப்பூசி ஜூன் மாதவாக்கில் விநியோகம்- மந்திரி புசார் தகவல்

அம்பாங், மே 19- சிலாங்கூர் மாநில அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்கும்பணி வரும் ஜூன் மாதவாக்கில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி உற்பத்தியை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தை மாநில அரசு சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தியாளருடன் இறுதி செய்தவுடன் அதன் விநியோகம் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

அந்த தடுப்பூசி கொள்முதல் தொடர்பிலான ஒப்பந்தங்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அதனை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணி வரும் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

இதன் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி எவ்வளவு தடுப்பூசிகள் நமக்கு கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் தடுப்பூசியின் விநியோகத் திட்டத்தை நாம் வெளியிடுவோம் என்று அவர் மேலும் சொன்னார்.

மாநில மக்களுக்காக சிலாங்கூர் அரசு வாங்கத் திட்டமிட்டுள்ள தடுப்பூசிகளின் ஆகக் கடைசி நிலவரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, சிலாங்கூர் மக்களுக்கு 500,000 சினேவேக் தடுப்பூசிகளை மாநில அரசு விநியோகிக்கவுள்ளதாக வெளிவந்த தகவலை சுகாதார துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சித்தி மரியா மாமுட் நேற்று முன்தினம் மறுத்திருந்தார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்காக முப்பது லட்சம் முதல் ஐம்பது லட்சம் வரையிலான தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய சிலாங்கூர் அரசு பத்து கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.