HEALTH

சிலாங்கூர் மக்களுக்கு சினோவேக் தடுப்பூசி வழங்கப்படுகிறதா? ஆட்சிக்குழு உறுப்பினர் மறுப்பு

17 மே 2021, 2:29 PM
சிலாங்கூர் மக்களுக்கு சினோவேக் தடுப்பூசி வழங்கப்படுகிறதா? ஆட்சிக்குழு உறுப்பினர் மறுப்பு

ஷா ஆலம், மே 17- சிலாங்கூர் மாநில மக்களுக்கு சினோவேக் தடுப்பூசி செலுத்தப்படுவதாக வாட்ஸ்ஆப் புலனம் வழி  பரப்பப்பட்டு வரும் தகவலில் உண்மை  இல்லை என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அந்த தடுப்பூசி தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் அல்லது அறிக்கையும்  மந்திரி புசார் அல்லது தமது மூலமாக  மட்டுமே வெளியிடப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும்  நான் அல்லது மந்திரி புசார் ஆகிய இருவர் மட்டுமே வெளியிடுவோம்  என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கீழ்க்கண்ட சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ளும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

  1. Facebook Dato’ Seri Amirudin Shari
  2. Facebook Dr Siti Mariah
  3. Facebook Selangor Task Force Covid 19
  4. Facebook Media Selangor

கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதற்கு மத்திய மேற்கொள்ளும் முயற்சிகள் முழுமையடையாத பட்சத்தில்  சிலாங்கூர் அரசு தனது மாநில மக்களுக்காக அத்தடுப்பூசிகளை வாங்கும் திட்டம் நிறைவேற்றம் காண்பதற்கு வாய்ப்பில்லை  டாக்டர் சித்தி மரியா கடந்த 5ஆம் தேதி கூறியிருந்தார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்காக 50 லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்படும் என்று மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் 18ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்நோக்கத்திற்காக அது  பத்து கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.