கோலாலம்பூர், மே 17-- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை இன்று 4,446 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 3,780 ஆக இருந்தது.
நோய்த் தொற்று அதிகம் கண்ட மாநிலங்களில் சிலாங்கூர் முதலிடம் வகிப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
அம்மாநிலத்தில் 1,650 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சரவா மாநிலத்தில் 433 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
391 சம்பவங்களுடன் ஜொகூர் மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில் கிளந்தான் (343), கோலாலம்பூர், (297), நெகிரி செம்பிலான் (243), கெடா (236), பேராக் (203), திரங்கானு (201) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மேலும், பினாங்கு 159 சம்பவங்களையும் பகாங் 139 சம்பவங்களையும், மலாக்கா 80 சம்பவங்களையும், சபா 60 சம்பவங்களையும், புத்ரா ஜெயா 11 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளன என்றார் அவர்.
எனினும், லபுவான் மற்றும் பெர்லிசில் எந்த சம்பவமும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


