HEALTH

நோன்பு பெருநாளை விட பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன் களப் பணியாளர்கள்

13 மே 2021, 9:34 AM
நோன்பு பெருநாளை விட பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன் களப் பணியாளர்கள்

கங்கர், மே 13 - மக்கள் தங்கள் குடும்பங்களுடன் நோன்பு பெருநாளை கொண்டாடுகையில், முன்னணி களப் பணியாளர்கள் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் அயராது உழைக்கின்றனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், சரியான ஓய்வில்லாமல், சோர்வுடன் அவதிப்பட்டு வரும் அவர்கள், நாட்டுக்கும் மக்களுக்குமான தங்கள் போராட்டங்களை தொடரும் ஹீரோக்கள் அவர்கள்.

கங்கர் காவல் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அஹ்மத் கமில் மொஹமட், 26, கூறுகையில், இந்த ஆண்டு நோன்பு பெருநாளை  தனது பூர்வீக கிராமத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாட முடியாத மூன்றாவது ஆண்டாகிறது என்கிறார்.

"என்னைப் பொறுத்தவரை, இது ஒரு சுமை அல்ல, ஆனால் ஒரு போலீஸ்காரரின் பொறுப்பு. பண்டிகை காலங்களில் நான் கடமையில் இருக்கும் ஒவ்வொரு முறையும், என் மனைவி எனக்கு குத்துபாட்  மற்றும் இறைச்சி ரெண்டாங்கை சமைத்து அஞ்சல் பொதி அனுப்புவார் என்கிறார். "என் குடும்பத்தினருடன் என்னால் கொண்டாட முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் என் மனைவி அனுப்பிய ராயா உணவுகளை சாப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது," என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

இதேபோன்ற உணர்வைப் பகிர்ந்து கொண்ட 30 வயதான அரசு செவிலியர் நூர் ஜைரா மாட் லாசிம், அவர் ராயாவில் பணிபுரியும் இரண்டாவது ஆண்டு இது என்றார். "முதலில், நான் அசிங்கமாக உணர்ந்தேன், ஆனால் இப்போது நான், அதற்காக வருத்தப்படவில்லை, ஏனென்றால் நான் என் நண்பர்களால் மகிழ்விக்கப் படுகிறேன்," என்று ஒரு குழந்தைக்கு தாயான அவர் கூறினார்.

மக்கள் தொண்டர் கார்ப்ஸ் (ரெலா) உறுப்பினர் சானி அபுபக்கர், 43 க்கு, இவ்வாண்டு சாங்லாங் சாலை சாலைத் தடுப்பில் பணியில் உள்ளதால், அவரது குடும்பத்தினருடன் நோன்பு பெருநாளை கொண்டாட முடியாமல் போனது இதுவே முதல் அனுபவமாகும் என்று தனது அனுபவத்தை கபகிர்ந்துக்கொண்டார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.