ECONOMY

நாடு தழுவிய பொது முடக்கம்- கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

11 மே 2021, 3:02 AM
நாடு தழுவிய பொது முடக்கம்- கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

கோலாலம்பூர், மே 10-  இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில்  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் படுத்தப்பட்டுள்ளது. அந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு-

  1. அவசர வேளை, சுகாதாரம், வேலை, பொருளாதாரம், தடுப்பூசி செலுத்துவது மற்றும் தொலைவில் உள்ள கணவர் அல்லது மனைவியைச் சந்திப்பது ஆகிய காரணங்கள் தவிர்த்து இதர எந்த காரணத்திற்காகவும் மாநில அல்லது மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
  2. திருமணம் வைபங்கள், நிச்சயதார்த்தம், விருந்து, அரசாங்க தனியார் நிகழ்வுகள், மாநாடுகள் உள்பட அனைத்து பொது மற்றும் சமய நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. எனினும், முஸ்லிம்களுக்கு சமய இலாகாவும்  முஸ்லீம் அல்லாதோருக்கு பதிவுத் துறையும் நிர்ணயிக்கும் எஸ்.ஒ.பி. நிபந்தனைகளுக்கேற்ப திருமணச் சடங்கு நடைபெற அனுமதிக்கப்படுகிறது.
  3. அனைத்து விதமான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. மெதுவோட்டப் பயிற்சி, சைக்கிளோட்டம் மற்றும் கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கும் உடற்பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  4. அனைத்துலக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர்த்து இதர அனைத்து கல்விக் கூடங்களும் மூடப்படுகின்றன. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் சிறார் பராமரிப்பு மையங்கள், மழலையர் பள்ளிகள், பாலர் பள்ளிகள் எஸ்..ஒ.பி. நிபந்தனைக்குட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
  5. தனியார் வாகனங்கள், டாக்சிகள், கிராப் போன்ற வாடகைக் கார்களில் ஒட்டுநர் உள்பட மூவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
  6. உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி கிடையாது. உணவுகளை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
  7. அலுவலகத்தில் ஒரு நேரத்தில் 30 விழுக்காட்டு பணியாளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கேற்ப வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை முதலாளிகள் கடைபிடிக்க வேண்டும்.

8.நோன்புப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ்களில் அனுமதிக்கப்படுகிறது. எனினும், ஆயிரம் பேருக்கும் மேல் தொழுகை நடத்துவதற்குரிய வசதி உள்ள பள்ளிவாசல்கள் அல்லது சூராவ்களில் 50 பேரும் ஆயிரம் பேருக்கும் குறைவானவர்களுக்கு இட வசதி கொண்ட பள்ளிவாசல்கள் அல்லது சூராவ்கள் 20 பேரும் அனுமதிக்கப்படுவர்.

  1. முஸ்லீம் அல்லாதோருக்கான வழிபாட்டுத தலங்களிலும் எஸ்.ஒ.பி. விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன. இந்த வழிபாட்டுத் தலங்களுக்கான நிபந்தனைகளை ஒற்றுமைத் துறை அமைச்சு நிர்ணயிக்கும்.
  2. சபா, சரவா மற்றும் கூட்டரசு பிரதேசத்தில் அமல் செய்யப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.